பேராதனை பல்கலைக்கழகத்தின் ஜயதிலக மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 18 ஆம் திகதி காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பேராதனை காவல் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் திருட்டு
குறித்த விரிவுரையாளர் தனது மோட்டார் சைக்கிளை பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்திய நிலையில் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மைதானத்தை சோதனையிட்டதன் பின்னர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.