Uncategorized

மக்கள் வாக்கைப் பெற்று கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல!


மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று கதிரைகளை சூடாக்கிக் களிப்பதற்கான பயணப்பாதை அரசியல் பாதை அல்ல என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மாறாக யுத்த வடுக்களை சுமந்த நலிவடைந்துள்ள சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையினை கட்டியெழுப்பி தலைநிமிர்வுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான பயணமே இது எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் கட்டுமுறிவு கிராமத்திற்கான பாதையில் கிராமிய சிறிய பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தாமதமாக்கப்படுவது தொடர்பாக பார்வையிடுவதற்காக இன்று மாலை அப்பகுதிக்குச் சென்ற போது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“கிழக்குத் தமிழரின் அதிகார வலுவாக்கப் பயணத்தின் மற்றுமொரு பரிணாமமே கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவனேசதுரை சந்திரகாந்தன் பொறுப்பெடுத்தது.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் திட்டம்

மக்கள் வாக்கைப் பெற்று கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல! | Sri Lanka Tmvp Press Meet War Parliament Mp

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அதிக பேராதரவை பெற்றவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினை பொறுப்பெடுத்தது ஆசனத்தினை சூடாக்கி வீர வசன அரசியல் பேசி கிழக்கு தமிழர்களின் இருப்பை மேலும் கேள்விக்குறியாக்கி அரசியல் அனாதைகளாக மக்களை நடுத்தெருவில் விடுவதற்காகவல்ல.

முப்பத்தி இரண்டு வருட யுத்தம் எழுபத்தி இரண்டு வருட அரசியல் வியாபாரம் கற்றுத்தந்த பாடத்தின் விளைவாக அரசியல் அதிகாரத்தில் நம்பிக்கையிழந்திருக்கின்ற மக்களிடத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்பி நிலைபேறான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்காகவேயாகும்.


2008ல் கிடைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் என்கின்ற அரசியல் அதிகாரத்தின் ஊடாக எவ்வாறு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளையும் கிழக்கு மக்களின் தனித்துவத்தையும் கட்டியெழுப்பி மாகாணத்திற்கான அரசியல் அதிகாரம் எவ்வாறு பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்று இராஜாங்க அமைச்சு மூலம் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்திலும் எவ்வாறு மக்கள் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதனை நிறைவேற்றிக்காட்டுவோம்.

இரட்டிப்பான செலவு

மக்கள் வாக்கைப் பெற்று கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல! | Sri Lanka Tmvp Press Meet War Parliament Mp


கட்டுமுறிவு கிராமத்திற்கான பிரதான போக்குவரத்து பாதையில் பாலம் அமைப்பதற்காக ஆரம்பித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை மீண்டும் துரிதமாக ஆரம்பிக்க வேண்டும் என குறித்த கிராமத்து மக்களால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து குறித்த இடத்தினை பார்வையிடுவதற்காக இன்று வந்தோம்.


பாலத்திற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கும்படி வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக 20 லட்சம் ரூபாய் செலவில் மதிப்பீடு செய்யப்பட்ட இப்பாலத்தின் மதிப்பீட்டுச் செலவானது தற்போது நாற்பத்தி ஒரு இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.


இக்குறித்த விஜயத்தின்போது கோரளைப்பற்று வடக்கு தவிசாளர் கண்ணப்பன் கணேசன் மற்றும் கோரளைப்பற்று தவிசாளர் திருமதி சோபாஜெயரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *