செய்திகள்

முக்கிய இஸ்லாமிய அறிஞர் 110 ஆவது வயதில் காலமானார் – ஜனாஸா நல்லடக்கத்தின் அலை கடலென திரண்ட மக்கள் (படங்கள்)எதியோப்பியா அவ்ரோமிய பிரதேசத்தில் வாழ்ந்த மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர் அல்லாமா அல்முஅம்மர் அல்ஹாஜ் ஆதம் தவ்லா கடந்த 18 ஆம் திகதி மரணமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அவரது வயது 110, சகல இஸ்லாமிய கலைகளிலும் தேர்ச்சி பெற்ற பகீஹ்  முஹத்திஸ் முபஸ்ஸிர் முஅர்ரிஹ் மற்றும் முப்தியாக வாழ்நாளின் இறுதி நாட்கள் வரை சிறந்த நினைவாற்றலுடன் பணி செய்திருக்கிறார், பல்லாயிரக்கணக்கான உலமாக்களை உருவாக்கியிருக்கிறார்.

அவரது சமுதாய சீர்திருத்த பணிகள் காரணமாக பலதடவைகள் சிறைவாசம் அனுபவித்திருக்கின்றார்.

அவரது வாழ்வில் பாட்டன் பூட்டன் தந்தை மகன் பேரன் என பல தலைமுறைகள் வாழக் கண்டிருக்கிறார்.

மதீனா மாகநகரிற்கு முன்னர் ஹபஷா  அபீஸீனியா எனும் எதியோப்பியாவிற்கு இஸ்லாத்தின் தூது சென்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

கடந்த 19 ஆம் திகதி அவரது பிறந்த இடமான அவ்ராமியா பிரதேசத்தில் இமாம் அஹ்மத் அல்காஸி மைதானத்தில்  இடம்பெற்ற அவரது ஜனாஸாத் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காட்சி.

உலகெங்கும் ஆரவாரமில்லாது இஸ்லாமியப் பணிசெய்யும் இவ்வாறான மாமேதைகள் மீது எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக!

யா அல்லாஹ், மரணிக்கும் வரைக்கும் நாம் அறிந்திறாத இந்த மாமேதையின் பர்ஸக் மற்றும் ஆகிரா வாழ்வை உயரிய சுவனத்தின் நந்தவனமாக உனது நல்லடியார்கள்  நேசர்கள் ஷுஹதாக்கள் ஸாலிஹீன்கள் சகவாசத்தில் ஆக்கி வைப்பாயாக!

தகவல்: ஸாலிம் ராஷித்

அல்முஜ்தமா சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் – குவைத்


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *