Uncategorized

இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு


இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் மருந்து திரவங்கள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் சிரப் வகையினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம்

இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு | Another Countrys Syrup Issue 100 Child Deaths

இந்தோனேசிய அதிகாரிகள் குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், சிரப் ஒன்றில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனால் 99 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மருந்து உள்ளூர் தயாரிப்பா அல்லது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

இந்தோனேசியாவிலும் திரவ பாணி மருந்து அருந்தி 100 குழந்தைகள் உயிரிழப்பு | Another Countrys Syrup Issue 100 Child Deaths


இந்தோனேசிய அதிகாரிகள் 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு பல்வேறு சிறுநீரக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *