செய்திகள்

பாண் விற்பனையில் மக்களை, ஏமாற்றும் மோசடிக்காரர்கள்



நுகர்வோர் கொள்வனவு செய்யும் பாணில் இடம்பெறும் மோசடி தொடர்பில் இன்று வௌிப்படுத்தப்பட்டிருந்தது.


அதிக விலைக்கு பாண் விற்கப்படுகின்ற போதிலும், மக்களுக்கு சரியான நிறை மற்றும் தரமான பாண் கிடைப்பதில்லை என “அத தெரண” நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


1864 ஆம் ஆண்டின் 13 ஆம் எண் பாண் கட்டளை சட்டத்தின் படி, விற்பனைக்கான பாணின் நிறை குறிப்பிட்ட நிறையை கொண்டிருக்க வேண்டும்.


அதன்படி, அது இருக்க வேண்டிய நிறை 225, 450, 900 மற்றும் 1,800 கிராம் ஆகும்.


இந்நாட்டில் அதிகமாக உண்ணப்படும் பாணின் நிறை 450 கிராம் ஆக இருக்க வேண்டும்.


ஆனால் அதிக விலை கொடுத்தாலும் வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் 450 கிராம் நிறையுள்ள பாண் கிடைப்பதில்லை என்பது எமது ஆய்வில் தெரியவந்தது.


இதன்படி விற்பனை நிலையங்களை இணைத்து பல பகுதிகளில் ஆய்வு நடத்தினோம்.


சந்தையில் தரமற்ற பாண் விற்பனை செய்யப்படுவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.


அத்தகைய பாணின் நிறை 300, 305, 314, 330 மற்றும் 370 கிராம் என பதிவாகி இருந்தன.


இது தொடர்பில் இன்று நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *