பிரித்தானியாவில் அதிகரித்த பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமராக பதவியேற்று 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார் எனவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் லிஸ் டிரஸ் தனது நேற்றைய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
மீண்டும் பிரதமராக வேண்டும்
இந்நிலையில், தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களவை தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சூழலில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான 55% வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரித்தானிய அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், லிஸ் டிரசுக்கு பதிலாக மீண்டும் தான் பிரதமர் ஆவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.
இதேவேளை, டிசம்பர் 2024-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க உள்ள கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி நாடாளுமன்ற உப்பினர்களிடம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.