சீனாவின் உள்ளக மற்றும் கரையோரங்களில் இராணுவ படையணியினரை அதிகரித்து பாதுகாப்பை விஸ்தரிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
சீனா மேற்கொள்ளும் சில தீர்மானங்களினால் தமது நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அண்மைய சில நாட்களாக மேற்கத்தைய நாடுகள் கூறி வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை தேசிய பாதுகாப்பானது நாடொன்றின் முக்கிய அங்கமாகும் எனவும் சீன அதிபர் தெரிவித்தள்ளார் என்பதும் சுட்டிக்கட்டத்தக்கது.