யாழ்ப்பாணம் கக்கடைதீவிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிமருந்துகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவிற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டுள்ளனர்.
மனிதர்கள் வாழாத தீவு
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஊர்காவல்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீவில் மனிதர்கள் வாழ்வதில்லை எனவும் கூறப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.