Uncategorized

சிறிலங்கா மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை..!


முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.




உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித ஓய்வூதிய திட்டங்களும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.


ஆனால், வரி செலுத்துவோருக்கு அரசாங்கத்தின் பங்களிப்புடன் ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகம் செய்யுமாறு கோருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோர்

சிறிலங்கா மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை..! | New Tax Based Pension System

அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 24,200 மில்லியன் ரூபாவை ஓய்வூதியத்திற்காக செலவிடுவதாக தெரியவருகிறது.


ஓய்வூதியம் பெறும் சுமார் 690,000 பேர் இலங்கையில் உள்ளதாகவும், அவர்களுக்காக இந்த தொகை செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், பொருளாதார சிரமங்கள் அல்லது பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *