Uncategorized

மலையக மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்


மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.


ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார்.


சந்தனசாமி ஜோசப், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.



தெளிவத்தை ஜோசப் தமிழ்நாட்டில் கும்பகோணத்தின் உயர்நிலைப் பள்ளியில் கற்றதன் பின்னர், இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

இவர் பெற்ற விருதுகள் 

மலையக மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் | Sri Lankan Writer Dies

இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்.


தமது படைப்புக்களுக்காக அவருக்கு சாகித்திய விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013) சாகித்திய ரத்னா (2014) போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.

மலையக மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் | Sri Lankan Writer Dies

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவலில் ஒன்றாகும் அதேவேளை இவரது குடை நிழல் என்ற புதின நூல், 2010 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவையின் விருதைப் பெற்றுள்ளது.


இந்நிலையில், இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *