Uncategorized

யாழில் திருட்டு சம்பவம்..! சிசி டிவியில் சிக்கிய திருடன்


யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.



குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மாலை விற்பனை நிலையத்தினை பூட்டி விட்டு சென்ற அரை மணி நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விற்பனை நிலையத்தில் இருந்த 30,000 ரூபா பணத்தினை திருடி சென்றுள்ளார்.

திருட்டு சம்பவம்

யாழில் திருட்டு சம்பவம்..! சிசி டிவியில் சிக்கிய திருடன் | Theft At A Building Materials Store In Jaffna

குறித்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசி டிவி கமராவில் பதிவான நிலையில் அதனை ஆதாரமாக கொடுத்து உரிமையாளரால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *