Uncategorized

நெருக்கடியில் திணறும் பிரித்தானிய..! நிர்க்கதியான பொருளாதாரம் – சில்லறை விற்பனை வீழ்ச்சி


கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இருந்து பிரித்தானியாவில் சில்லறை விற்பனை சரிவை நோக்கி நகர்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


இதன்படி, சில்லறை விற்பனை அளவுகள் கடந்த மாதம் 1.4 சதவீத சரிவைக் கண்டுள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



பொருளாதார வல்லுநர்கள் கணித்த 0.5 சதவீத சரிவை விட இந்த சரிவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாராணியின் இறுதிச் சடங்கு

நெருக்கடியில் திணறும் பிரித்தானிய..! நிர்க்கதியான பொருளாதாரம் - சில்லறை விற்பனை வீழ்ச்சி | Uk Economic Crisis 2022 Uk Tax Cuts 2022



இதேவேளை, மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக பல கடைகள் மூடப்பட்டிருந்ததால், செப்டம்பரில் வீழ்ச்சி ஏற்பட்டதாக சில்லறை விற்பனையாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்’ என பிரித்தானிய பொருளாதார புள்ளியியல் இயக்குனர் டேரன் மோர்கன் தெரிவித்துள்ளார்.


சில்லறை விற்பனையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் வீழ்ச்சி காணப்படுவதாகவும், உணவுக் கடைகளில் விற்பனை வீழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.


புதிய தரவுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பை விட குறைவாக பொருட்களை கொள்வனவு செய்வதை எடுத்துரைக்கின்றது. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *