Uncategorized

22 ஆவது திருத்தத்தால் – ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது பிளவு


22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, பல எம்.பிக்கள் முன்பாக 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம் என தெரிய வருகிறது.

 பசிலுக்கு எதிராக களமிறங்கிய அண்ணன் சமல்

22 ஆவது திருத்தத்தால் - ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது பிளவு | A Schism Within The Rajapakse Family

மேலும் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளதாகவும், பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் அதிபர் தேர்தலில் போட்டியிட கோட்டாபய தனது இரட்டை குடியுரிமையை இரத்து செய்தது போன்று பசில் ராஜபக்சவும் இரட்டை குடியுரிமையை துறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



அத்துடன் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்குவதற்கு தயாராகும் விடயம் தொடர்பில் சமல் ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

தேசிய அமைப்பாளராக நாமல்

22 ஆவது திருத்தத்தால் - ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது பிளவு | A Schism Within The Rajapakse Family

அதன்படி அண்மைய நாட்களில் நாமல் ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட எந்தவொரு கலந்துரையாடலிலும் சமல் ராஜபக்ஷவோ அல்லது அவரது மகனான ஷசீந்திர ராஜபக்ஷவோ பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இது தவிர நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ இருவரும் தமக்கு நெருக்கமான பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் தனித்தனியாக செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மௌனமாக மகிந்த -சமல்,கோட்டா இணக்கம்

22 ஆவது திருத்தத்தால் - ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது பிளவு | A Schism Within The Rajapakse Family


எவ்வாறாயினும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனமான கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *