செய்திகள்

விசேட அதிரடிப்படை கெப்டன் தேவிந்த மரணம்


வெலிகந்தயில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கெப்டன் தேவிந்த உட்வர்ட் (Captain Devinda Woodward) உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த கெப்டன் உள்ளிட்ட இராணுவத்தினர் திருகோணமலையிலிருந்து மாதுருஓயா விசேட பயிற்சி முகாமிற்கு செல்லும் போதே, இந்த விபத்து இடம்பெற்றதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் குறிப்பிட்டார். 

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினர் பயணித்த ஜீப் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மாத்தளை மில்லவான பகுதியை சேர்ந்த 27 வயதான கெப்டன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பரி. தோமா கல்லூரியின் பழைய மாணவரான தேவிந்த உட்வர்ட் 2014 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

உயிரிழந்தவரின் சடலம் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏனைய இராணுவத்தினர் மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *