தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக குடாகங்கை நிரம்பி வழிவதால் புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் புளத்சிங்கள மொல்காவ பிரதான வீதியின் தம்பல, அட்டபாகஸ் சந்தி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்றிரவு நிலவரப்படி, குக்குலே கங்கையின் மேல் பகுதிகளில் பெய்த கனமழையால் அதன் வான் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.