இறுதிச் சுற்று
பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று (22) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 நடத்தப்படுகின்றது.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இடம் பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று இடம் பெறும் இறுதி சுற்றுப்போட்டியில் ஜப்னா றோயல்ஸ் அணியை எதிர்த்து சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா றோயல்ஸ்
இதுவரை இடம் பெற்ற சுற்று போட்டிகளில் ஜப்னா றோயல்ஸ் அணி 6 ஆட்டங்களை எதிர்கொண்ட நிலையில் 4 போட்டிகளில் வெற்றியீட்டியது.
இதேவேளை 2 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.
சுண்டிக்குளி ஈகிள்ஸ்
இதுவரை இடம் பெற்ற சுற்று போட்டிகளில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 7 ஆட்டங்களை எதிர்கொண்ட நிலையில் 5 போட்டிகளில் வெற்றியீட்டியது.
இதேவேளை 2 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.
பங்குபற்றிய அணி விபரம்
- வேலனை வேங்கைகள்
- சுழிபுரம் றைனோஸ்
- ஜப்னா றோயல்ஸ்
-
ஜப்னா பன்தேர்ஸ் -
ஜப்னா சலன்ஜேர்ஸ் -
யாழ் சீட்டாஸ்
சுழிபுரம் - கிறீன் ராகன்ஸ்
-
சுண்டிக்குளி ஈகிள்ஸ் -
அரியாலை கில்லாடிகள் 100
- கிரிகெட் நைட்ஸ்
- கொக்குவில் ஸ்ரார்ஸ்
- றைசிங் ஸ்ரார்ஸ்
சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்,
வெற்றியாளர் : 1000000.00/=
இரண்டாம் இடம் : 500000.00/=
மூன்றாம் இடம்: 200000.00/=
நான்காவது இடம்: 100000.00/=