விலையை குறைக்காத பிரதான நிறுவனங்கள்
சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பிரதான கோதுமை மா விநியோகஸ்தர்களான பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கோதுமை மா பொதியில் விலை குறிப்பிடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
ஆனால் அதனை மீறியதால் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், கோதுமை மா பொதிகளில் புதிய குறைக்கப்பட்ட விலைகளைக் குறிப்பிட்டு, பிறிமா மற்றும் செரண்டிப் கோதுமை மா தயாரிப்புகள் எதிர்வரும் நாட்களில் சந்தையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.