Uncategorized

கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது


பிரபல போதைப்பொருள் வியாபாரி கசுன் மற்றும் ரூபனின் உதவியாளர்கள் என கூறப்படும் மூவர் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறை விசேட அதிரடிப்படையின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளி

கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது | Real Information About The Murder

கடந்த ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி ரணவக்க ஆராச்சிகே அசித மதுரங்க பெரேரா என்ற அலிவத்தே அசிதவை கொலை செய்ய பயன்படுத்திய உந்துருளியும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் உந்துருளிகளை பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சந்தேகநபர்கள் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *