மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.
மொத்தமாக 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் தமிழகத்தில், பெரும் கேள்விகளையும் – கொதிநிலையையும் உருவாக்கி இருக்கிறது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எந்த அளவிற்கு உண்மையானவை, அதன் நம்பகத்தன்மை, அதன் பின்னணி தொடர்பான விடயங்களை கூறுகிறார் ஐயன் கார்த்திகேயன்.