Uncategorized

13 வயது சிறுமி வன்புணர்வு – உடந்தையாக இருந்த தாய் கைது..! யாழில் சம்பவம்


யாழில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அத்துடன், சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ். மானிப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம மக்கள் தகவல்  

13 வயது சிறுமி வன்புணர்வு - உடந்தையாக இருந்த தாய் கைது..! யாழில் சம்பவம் | Sexually Abusing In Jaffna Police Arrest

சிறுமியின் தாயாரும், 41 வயதான சந்தேகநபரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சிறுமியை சந்தேகநபர் நீண்ட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.



சிறுமி மீதான தொடர் வன்புணர்வு தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.


குறித்த தகவலுக்கு சிறுமியின் தாய் மற்றும் 41 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *