Uncategorized

15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட இராணுவ வீரர்..! யாழில் சம்பவம்


பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.



இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

15 வயதுச் சிறுமி 

15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட இராணுவ வீரர்..! யாழில் சம்பவம் | The Thief Who Stole The Chain

15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளை  உந்துருளியில் பின்தொடர்ந்த நபர் சங்கிலியை அபகரித்து விட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.


சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து குறித்த வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர்.

தடுக்க வந்த இராணுவத்தினர் 

15 வயதுச் சிறுமியிடம் கொள்ளையிட்ட இராணுவ வீரர்..! யாழில் சம்பவம் | The Thief Who Stole The Chain

இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.



சந்தேக நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூறு கைவிடப்பட்டது. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *