Uncategorized

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி – நாட்டு மக்களுக்கு பேரிடி


பணவீக்கம்

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.


நாட்டில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரிக்கபப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறான நிலைமை நீடித்தால் பொருளாதாரத்திற்கு அழிவு ஏற்படும். கட்டுப்படுத்தும் நிலைமையை கடந்துவிட்டால் அதன் பின்னர் ஒரு போதும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

புற்று நோய் போன்ற பணவீக்கம்

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி - நாட்டு மக்களுக்கு பேரிடி | Dollar Exchange Rate Today Dollar To Lkr Cbsl Rate

பணவீக்கம் என்பது புற்று நோய் போன்றதாகும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்திவிடவில்லை என்றால் அது முழுமையாக பரவி உயிரை பறித்து விடும்.


நாணத்திற்கான மதிப்பு கடுமையான சரிந்து வருகின்றது. அதிக பணவீக்கத்தால், ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளது.


அரசாங்கத்தின் செலவினங்களை உயர் மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே மக்கள் மீது பாரியளவிலான வரிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.



பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வட்டி வீதத்தை அதிகரிப்பதுடன் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதுமே செய்ய வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *