Uncategorized

கெர்சன் நகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு ரஷ்யா அவசர அறிவிப்பு


கெர்சன் நகரிலிருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புடின் இராணுவ சட்டத்தைநடைமுறைப்படுத்தி உள்ளார்.

புடினின் இராணுவ சட்டம்

கெர்சன் நகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு ரஷ்யா அவசர அறிவிப்பு | Russian Authorities Order Evacuation Of Kherson

இந்நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உடனடியாக வெளியேற வேண்டும்

கெர்சன் நகரிலிருந்து மக்களை வெளியேறுமாறு ரஷ்யா அவசர அறிவிப்பு | Russian Authorities Order Evacuation Of Kherson

கெர்சன் நகரின் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது. எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷ்யாவின் அதிகாரபூர்வ எல்லைக்குள் வந்து சேரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *