Uncategorized

நடைமுறைக்கு வரும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்..! பதவிகளை இழக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்


 இரட்டை குடியுரிமை 

சிறிலங்காவின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இரத்தாகும் என்பதால், கௌரவமான முறையில் பதவி விலகுமாறு கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அத்துடன் அரசில் உயர் மட்டப்பதவிகளை வகித்து வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இந்த தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் 

நடைமுறைக்கு வரும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்..! பதவிகளை இழக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Sri Lanka Political Crisis

மேலும், இரட்டை பிரஜை உரிமையுடன் இலங்கையில் மகிழ்ச்சிக்காக வேலை செய்யும் நபர்கள் தற்போது தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் அந்த திருத்தச்சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ நாட்டின் உயர் பதவிகளையோ வகிக்க முடியாது.



இந்நிலையில், இரட்டை குடியுரிமை பெற்றவர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டுமாயின் அவர் தனது இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *