Uncategorized

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே



சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.



கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.

ரணிலிடம் கோரிக்கை

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே | Sri Lanka Political Crisis

ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் அதிபர் ரணிலிடம் கோரினேன் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

களியாட்ட விடுதிகள்

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே | Sri Lanka Political Crisis

கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் டயனா கமகே மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.



சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் முடிவிடுவது சரியாக இருக்காது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *