Uncategorized

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை..! பிரித்தானியா அரசின் அதிரடி முடிவு


பிரித்தானியா

சொந்த நாட்டிற்கு தன்னிச்சையாக திரும்ப மறுத்தால், அவர்களை இடம் மாற்ற முடிவு செய்துள்ளதாக பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இந் நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எந்த நாட்டிற்கு என உறுதியான தகவலை வெளியிட பிரித்தானிய நிர்வாகம் மறுத்துள்ளது.

சுமார் 120 இலங்கையர்கள்

credit: channel4



தற்போது சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



சாகோஸ் தீவுக்கூட்டமானது மொரிஷியஸ் மற்றும் பிரித்தானியா இடையே உரிமை கொண்டாடப்படும் பகுதியாகும்.


ஏற்கனவே, சாகோஸ் தீவுக்கூட்டம் மொரிஷியஸ் நாட்டுக்கு சொந்தம் எனவும், அதை சொந்தம் கொண்டாடாமல் அவர்களிடம் ஒப்படைக்க ஐக்கிய நாடுகள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.



தற்போது அந்த தீவில் தான் இலங்கையர்கள் 120 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சமளிக்க பிரித்தானியா மறுப்பு

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை..! பிரித்தானியா அரசின் அதிரடி முடிவு | Sri Lankan Refugees Uk Deport Third Country

இவர்களுக்கு தஞ்சமளிக்க பிரித்தானியா மறுப்பதுடன், மூன்றாவது நாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே, விவாதத்திற்குரிய சாகோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 60 இலங்கையர்கள் தன்னிச்சையாக சொந்த நாடு திரும்பியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *