செய்திகள்

கடவுள் நியாயமானவர், அவரது நீதிமன்றில் இந்த வழக்கினை பாரப்படுத்துகிறேன்ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விசாரணைகளை நடாத்த வெளிநாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எமது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போதியளவு சுதந்திரம் வழங்கினால் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் நியாயமானவர் எனவும் எனவே அவரது நீதிமன்றில் இந்த வழக்கினை பாரப்படுத்துவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *