Uncategorized

மியன்மாரில் இராணுவம் வான்வழிதாக்குதல் – 80ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று குவிப்பு


மியான்மர் நாட்டில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 80 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் இராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர்.

நேற்று அந்நாட்டு இராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

 ஐ.நா.சபை கண்டனம்

இதனிடையே, மியான்மர் இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக இராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு இராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *