செய்திகள்

மனைவி நோயாளியாக இருந்தபோதும், கணவரின் நேர்மையான செயல்


பாதுக்க, பெல்பொல கிராமத்தில் வீதியில் கிடந்த பணத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்த நேர்மையான நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டரை லட்சம் ரூபாய் பணத்துடன் பையை எடுத்த நபர், அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்துள்ளார்.

பணம் கிடைத்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை இழந்தவர் எவ்வளவு வேதனைப்படுவார் என எண்ணி அதனை உரிமையாரிடம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணி ஒன்றிற்காக சென்றுக் கொண்டிருக்கும் போதே இந்த பையை அவதானித்தேன். அது தங்கள் பிரதேசத்தை சேர்ந்தவருடையதாக இருக்க வேண்டும் என நினைத்து அவரை தேட ஆரம்பித்தேன்.

அதற்கமைய உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டேன். இது கடினமாக காலப்பகுதி. எனது மனைவியும் சுகயீனமாக உள்ளார்.

எனினும் மற்றவர்களின் பணத்தின் மீது ஆசைப்படுவது தவறு என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நபரின் நேர்மையை பலரும் சமூகவலைத்தளங்களில் பாராட்டியுள்ளனர். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *