Uncategorized

மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு


மட்டக்களப்பு- கொக்குவில் காவல் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி மூன்று கடற்றொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல்போயிருந்தார்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்து வருகின்றது, இந்த நிலையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களை மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது காணாமல்போன கடற்றொழிலாளர் திராய்மடு மூன்று பிள்ளைகளின் தந்தையான 54வயதுடைய உம்முனி விஜயகுமார் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.



காணாமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றுமுன் தினம் மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.



மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள், 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *