Uncategorized

யாழ்ப்பாணம் செல்கிறார் இலங்கையின் முதற் பெண்மணி


நாட்டின் முதல் பெண்மணியும்,
களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத்
துறையின் சிரேஷ்ட பேராசிரியரும்,
பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்ரமசிங்க
நாளை மறுதினம், வெள்ளிக்கிழமை
யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப்
புதிய இயல்பு நிலையில் நிலை
பேறான அபிவிருத்தி என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில்
கலந்து கொண்டு முதன்மை உரை
ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பா
ணத்துக்கு செல்லவுள்ளார்.

யாழ். பல்கலையில் சர்வதேச மாநாடு

யாழ்ப்பாணம் செல்கிறார் இலங்கையின் முதற் பெண்மணி | The First Lady Of Sri Lanka Is Going To Jaffna

புதிய இயல்பு நிலையில் எதிர்
காலத்தைச் செழுமைப்படுத்தல்
( Shaping the Future in the New
Normal) என்ற தொனிப் பொருளில்
நடத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச
ஆய்வு மாநாட்டுத் ( JUICE – 2022)
தொடரில், பல்கலைக்கழக பாலின
ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்
தினால் “பாலின ஒப்புரவு மற்றும்
சமத்துவத்தின் ஊடாகப் புதிய
இயல்பு நிலையில் நிலைபேறான
அபிவிருத்தியை அடைதல்” என்ற
தலைப்பிலான ஆய்வு மாநாடு
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
கைலாசபதி கலையரங்கில் நடை
பெறவுள்ளது.

முதன்மை உரையாளராக பங்கேற்பு

யாழ்ப்பாணம் செல்கிறார் இலங்கையின் முதற் பெண்மணி | The First Lady Of Sri Lanka Is Going To Jaffna

யாழ்ப்பாணம் பல்க
லைக்கழக பாலின ஒப்புரவு மற்றும்
சமத்துவ நிலையப் பணிப்பாளர்
பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ்
தலைமையில் நடைபெறவுள்ள
இந்த ஆய்வு மநாட்டின் முதன்மை
உரையாளராக இலங்கையின் முதல்
பெண்மணியும், களனிப் பல்கலைக்
கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட
பேராசிரியரும், பாலின ஒப்புரவு
மற்றும் சமத்துவத்தில் அனுபவம்
வாய்ந்த பெண்ணியவாதியுமான
மைத்திரி விக்ரமசிங்க கலந்து
கொள்ளவுள்ளார். 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *