செய்திகள்

இவ்வருட செப்டம்பர் 30 வரை, நாட்டில் 435 மனிதப்படுகொலைகள்இந்த வருடத்தின் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலத்திற்குள் நாட்டில் 435 மனிதப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, குற்றத்தடுப்பு வழக்கு விசாரணை கோவை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


தற்போது இடம்பெறும் பிரேத பரிசோதனை தொடர்பான சட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்வது அவசியமாகும். அவ்வாறு திருத்தங்களை இணங்கண்டு பரிந்துரை செய்வதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுதுவதற்கு தேவையா விதிமுறைகளை ஆராய்வதற்காக குற்றத்தடுப்பு வழக்கு விசாரணை கோவை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


அது தொடர்பில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 லோரன்ஸ் செல்வநாயகம்Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *