செய்திகள்

காத்தான்குயிலும், ஹம்பாந்தோட்டையிலும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்.“Blindness Control” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  கொழும்பு 10 ல் அமைந்துள்ள AMYS நிறுவனதினால்  வருடாந்தம் நடாத்தப்படும்  விழி வெண்திறை நீக்கம் (கண்புரை) ( Cataract ) சத்திர சிகிச்சை  முகாம் “இன்ஷா அல்லாஹ்” எதிர்வரும் நவம்பர் மாதம்  9 முதல் 18 ஆம் திகதி வரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும், 22முதல் 26 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை,  நாகுலுகமுவ, குடாவெள்ள பிரதேச வைத்திய சாலையிலும் நடைபெற  உள்ளது.

இதன் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் கண்புரை பரிசோதனை முகாம்கள் மூலம் தெரிவு செய்யப்படும் சகல இனங்களையும் சேர்ந்த சுமார் 2000 க்கும் அதிகமான பயனாளிகளுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வுள்ளது என நிறுவனத்தின் பணிப்பாளர் மெளலவி எம் எஸ்.எம்.தாஸீம் குறிப்பிட்டார்.


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *