Uncategorized

கனடாவில் அதிகம் வாழ்பவர்கள் யார்..! புலம்பெயரவுள்ளோருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்


கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவிகிதத்தினர் புலம்பெயர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

2041இல் நாட்டின் மக்கள் தொகையில் 29.1 முதல் 34 சதவிகிதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை கணித்துள்ளது.

புலம்பெயர்ந்தோரே அதிகளவில் தேவை

அதற்கு ஒரு முக்கிய காரணமாக, மக்களில் முதுமையடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதற்கு ஈடுகொடுக்கும் அளவில் இல்லை.

எனவே, பணி செய்வதற்கு கனடாவுக்கு புலம்பெயர்ந்தோரே அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.

அதிகமானோர் இந்தியர்கள்

 

இதேவேளை இன்னொரு தகவல், 2016க்கும் 2021க்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் எனக் கூறுகிறது.

அந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 18.6 சதவிகிதம் ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *