சர்வதேசம்

இலங்கையர் உட்பட 151 பேர் உயிரிழப்பு, நெரிசல் ஏற்பட்டதும் மாரடைப்பு ஏற்பட்ட பரிதாபம் – தென்கொரியாவில் துயரம்தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தவர்களில் இலங்கை​யைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் முகக் கவசம் அணியாத ஹாலோவீன் திருவிழா இது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *