Uncategorized

மூச்சுத் திணறி பலியான 151 பேர்! தேசிய துக்க தினமான அறிவிப்பு


தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறும்.



இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர்.

ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர்.



இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல்
நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள், 




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *