செய்திகள்

பாலியல் லஞ்சம் கேட்ட பணிப்பாளர் – இலங்கை சார்பில் அழகி போட்டியில் பங்கேற்ற பெண் பரபரப்பு புகார்

பாலியல் லஞ்சம் கேட்ட பணிப்பாளர் – இலங்கை சார்பில் அழகி போட்டியில் பங்கேற்ற பெண் பரபரப்பு புகார்
பாலியல் லஞ்சம் கேட்ட பணிப்பாளர் – இலங்கை சார்பில் அழகி போட்டியில் பங்கேற்ற பெண் பரபரப்பு புகார்


மியன்மாரில் அண்மையில் நடைபெற்ற “Mrs Grand International -2022” போட்டியில் கலந்துகொண்ட தன்னிடம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் பாலியல் இலஞ்சம் கேட்டதாக மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற திருமதி ரசாங்கி சாமிகா நேற்று (21) பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

சம்புத்தத்வ ஜயந்தி மன்றில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Mrs Grand International இன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்குனர் தன்னிடம் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை புகைக்க இரவு வருமாறு, தொலைபேசியில் அழைத்ததாகவும் அல்லது அவர் அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார் . அதன் பிரகாரம் தான் தோழி ஒருவருடன் வருவதாக தெரிவித்ததையடுத்து மியன்மாரில் இடம்பெற்ற போட்டியில்தனக்கான வசதிகளை துண்டித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பான ஒலிநாடாவையும் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டு, தன்னிடம் இதுபோன்ற பல ஒலிநாடாக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

போட்டி தொடர்பான பணம் செலுத்தாததால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாகவும், பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது கணவர் டொலர்களை அனுப்பியதாகவும் அவர் கூறினார். பணம் செலுத்தாததால் போட்டியின் அமைப்பாளர்கள் தன்னை கடைசி வரிசைக்கு அழைத்துச் சென்றதாகவும் மேடையில் தன்னைக் உரிய வகையில் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பாலியல் இலஞ்சம் கோரியமை மற்றும் சர்வதேச சமூகத்தின் முன் இலங்கைக்கு அவதூறு ஏற்படுத்தியமை இலங்கை இயக்குனர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது சட்டத்தரணி சந்தருவன் சேனாநாயக்க தெரிவித்தார்.

மவறட்ட

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *