
நீண்ட காலமாக நாட்டில்
நிலவும் தமிழர் பிரச்சினைக்கு
தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை
சந்தேக
கண்ணோட்டத்திலேயே தாம்
பார்ப்பதாக தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்
வரவு செலவுத் திட்டத்தின்
இரண்டாம் வாசிப்பு மீதான
7 ஆம் நாள் விவாதத்தில்
உரையாற்றும் போதே அவர்
இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,
வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றோம்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற
குழு கூடியது. இதன்போது
வரவு செலவுத் திட்டம்
தொடர்பில் தீர்மானங்களை
மேற்கொண்டோம்.
பல்வேறு குறைபாடுகளை
கண்டறிந்தோம்.
நாட்டின் நலனுக்கு
முரணான விடயங்களை
கண்டுள்ளோம். பாதுகாப்பு
துறைக்கு அதிகளவில்
நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான
அடிப்படை சேவைகள்
குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களில்
பாதுகாப்புக்கான நிதி 12
வீதத்தால் அதிகரித்துள்ளன.
இது அவசியமான விடயம்
அல்ல.
பொருளாதார
நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும்
சாதகமான விடயங்களை
மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை.
இதனால் நாங்கள் வரவு செலவுத்
திட்டத்தை எதிர்க்கின்றோம்.
சந்தேக கண்ணோடே பார்க்கின்றோம்
இதேவேளை அதிபர் ரணில்
அண்மைக் காலமாக
தொடர்ச்சியாக ஒரு விடயத்தை
குறிப்பிடுகின்றார். நீண்ட
காலமாக நாட்டில் நிலவும்
தமிழர் பிரச்சினைக்கு
தீர்வு காண்பதாக
தெரிவித்துள்ளார். அதனை
நாங்கள் சந்தேக கண்ணோடே
பார்க்கின்றோம். அவரை
ஒருகட்டத்தில் நம்பினோம்.
இந்த பிரச்சினையில்
பேச்சுவார்த்தையின் மூலம்
தீர்ப்பதாக அதிபர்
குறிப்பிட்டாலும் அதனை
செய்யவில்லை என்றார்.