Uncategorized

யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள் (படங்கள்)

யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள் (படங்கள்)
யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள் (படங்கள்)


யாழ். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பதாகைகள்

யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள் (படங்கள்)

இதன் போது “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை சூழ அவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.


இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.


அதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *