
ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு ஆணையாகத்தின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கவுள்ளது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்தது.
இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்பட்டு அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.
மகாத்மா காந்தியின் சிலை
புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் இந்த காந்தி சிலையை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா. தலைமையகத்தில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை இடம்பிடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.