செய்திகள்

ஜம்இய்யத்துல் உலமா நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது ஏன்…?

ஜம்இய்யத்துல் உலமா நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது ஏன்…?
ஜம்இய்யத்துல் உலமா நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது ஏன்…?– AA. Mohamed Anzir –

கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில்,   நேற்று வியாழக்கிழமை (19) ஆம் திகதி நடைபெற்ற,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்  100 வது ஆண்டு நிறைவு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பங்கேற்காது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜப்னா முஸ்லிம் இணையம் ஆராய்ந்த போது,  கிடைக்கப்பெற்ற தகவல்கள் கீழ்வருமாறு,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஜம்மியத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அழைப்பிதழை கையளித்துள்ளது. அவரும் வருதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

18 ஆம் திகதி புதன்கிழமை இரவும், இதுதொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தமது கட்சியின் தலைவருக்கு ஞாபகமூட்டியுள்ளார்.

இருந்தபோதும் 18 ஆம் திகதி புதன்கிழமை, தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை 19 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் அவசரமாக நிறைவேற்ற, ஜனாதிபதி ரணில் அவசரமாக துடித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் நிறைவேறினால், உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம், என்ற நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், தனது பிரசன்னம் பாராளுமன்றத்தில்  மிகப் பிரதானமானது என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ஜம்மியத்துல் உலமா நிகழ்வில் பங்கேற்கவில்லை.

மேலும் பிரமுகர் அமர்வு 1 மணித்தியாலம் என ஜம்மியத்துல் உலமாவின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த ஒரு மணித்தியாலத்திற்குள் சஜித்தினால் பங்கு கொள்வது சிரமமான விடயமாக இருந்ததாகவும் அறிய வருகிறது.

இதுதான் உண்மையான, பிரதான காரணம் ஆகும்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமாவின் றூற்றாண்டு விழா முடிந்து, எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ள, ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், சஜித் பிரேமதாசாவை சந்திப்பதற்கு, அவரிடம் நினைவுச் சின்னத்தை கையளிக்கவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *