
இலங்கையில் போக்குவரதுசபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் சாமர்த்திய செயலால் விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்தின் தடுப்பு திடீரென செயலிழந்துள்ளது.
சுதாகரித்து கொண்ட சாரதி பேருந்தை அருகில் இருந்த மண் மேட்டில் இடித்து நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்குத்தான சாய்வான வீதி
ஹப்புத்தளை, பெரகலையில் செங்குத்து சாய்வான மலையில் உள்ள
வீதியில் பேருந்து ஓடிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.