Uncategorized

35 ரூபாவால் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை – சிறிலங்கா போல் மாறும் பாகிஸ்தான்

35 ரூபாவால் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை – சிறிலங்கா போல் மாறும் பாகிஸ்தான்
35 ரூபாவால் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை – சிறிலங்கா போல் மாறும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் சடுதியாக அதிகரித்துவருவதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 35 ரூபாய் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.249. 80 க்கு விற்பனையாகிறது.

அதேவேளை, ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.262.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை

35 ரூபாவால் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை – சிறிலங்கா போல் மாறும் பாகிஸ்தான்

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா டொலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.

சர்வதேச செலாவணி நிதியத்தின் 9 ஆவது மதிப்பாய்வை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது. எனவே, அந்நாட்டின் பொருளாதார நிலையற்றத் தன்மை கடுமையான பண வீக்கத்திற்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *