
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதியை தேர்தல் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற பெப்ரவரி மாதம் 20 ம் திகதி முதல் 28 ம் திகதி வரை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.