
பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான, சிறிலங்கா காவல்துறையிரின் பலப் பிரயோகங்களுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சட்டத்தரணி தவராசாவும் யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாடு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு அதிபர் யாழிற்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளை தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு எதிராக பேரணியை முன்னெடுத்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் கடந்த ஜனவரி 18ம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றின் உத்தரவு
இந்நிலையில் நாளைய தினம் வேலன் சுவாமிகளை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வேலன் சுவாமி மற்றும் சட்டத்தரணி தவராசாவும் யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.