செய்திகள்

SLT – MOBITEL இடமிருந்து 75 GB YouTube டேட்டா இலவசம் (முழு விபரம் உள்ளே)

SLT – MOBITEL இடமிருந்து 75 GB YouTube டேட்டா இலவசம் (முழு விபரம் உள்ளே)
SLT – MOBITEL இடமிருந்து 75 GB YouTube டேட்டா இலவசம் (முழு விபரம் உள்ளே)


தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது ஹோம் புரோட்பான்ட் வாடிக்கையாளர்களுக்கு 75GB YouTube டேட்டாவை வழங்க முன்வந்துள்ளது.

பெருமளவான சலுகைகள் மற்றும் அனுகூலங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களை பெறுமதி வாய்ந்த பாவனையாளர்களாக கௌரவிக்கும் வகையில், விசேட சுதந்திர தின அன்பளிப்பாக SLT-MOBITEL ஹோம் புரோட்பான்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த 75GB YouTube டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2023 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை இந்த விஷேட டேட்டா சலுகை வழங்கப்படுவதுடன், செயற்படுத்தப் பட்டதிலிருந்து 7 தினங்கள் வரை செல்லுபடியாகும்.

இந்த டேட்டா அன்பளிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு, வாடிக்கை யாளர்கள் MySLT App/Portal இல் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திர தின இலவச சலுகையை,menu இல் Data Add-Ons பகுதியில் பார்வையிட முடியும் என்பதுடன், செயற்படுத்திக் கொள்ளலாம். இந்த இலவச சலுகையை எந்தவொரு YouTube உடன் தொடர்புடைய செயற்பாட்டிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எனும் வகையில், SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர்களின் உறவுகளின் பெறுமதி கௌரவிக்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் அதற்குப் பொருத்தமான வகையிலும் 75 ஆவது சுதந்திர தின சலுகைக்கு நிகரான பல ஒப்பற்ற அனுகூலங்கள் SLT-MOBITEL இனால் வழங்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்கள் www.sltmobitel.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *