சர்வதேசம்

முஸ்லீம் வீட்டு சுவையில், ஆளில்லா பிரியாணி விற்பனையகம்

முஸ்லீம் வீட்டு சுவையில், ஆளில்லா பிரியாணி விற்பனையகம்
முஸ்லீம் வீட்டு சுவையில், ஆளில்லா பிரியாணி விற்பனையகம்


பி வி கே (BVK) பிரியாணி அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முதல் ஆளில்லா பிரியாணி விற்பனையகம். ( Manless Takeaway). 

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் சிறப்பாக இயங்கி வரும் பி வி கே ( BVK) பிரியாணி , இந்தியாவிலேயே முதல்முறையாக ஆளில்லா தானியங்கி பிரியாணி விற்பனை நிலையத்தை சென்னை கொளத்தூரில் துவங்கியுள்ளனர் . 

சென்னையில் மேலும் 12 இடங்களிலும் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர் பிரியாணி பிரியர்களுக்கு சுவையான பிரியாணி வழங்குவதோடு, அவர்கள் ஒரு புதிய வாங்கும் அனுபவத்தை பெரும் பொருட்டு தொடங்கப்பட்ட இந்த ஆளில்லா பிரியாணி விற்பனை நிலையத்தில் பிரியாணி ஆர்டர் செய்வது மிக சுலபம். . 

32 இன்ச் டிஜிட்டல் திரையில் உங்களுக்கு வேண்டிய உணவை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்து , பணத்தை வங்கி கிரெடிட் டெபிட் கார்டுகள் மூலமாகவோ யுபிஐ வசதி மூலமாகவோ செலுத்தலாம். உங்களுக்கு தேவையான உணவை நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த கணமே, கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிடும். விரைவாக சுடச்சுட வெளிவரும் நீங்கள் ஆர்டர் செய்த உணவை எடுத்துக்கொண்டு மகிழ்வோடு செல்லலாம் . 

இந்தப் பிரத்தியேக நூதன வசதியை உபயோகப்படுத்தும் அனுபவத்தை நீங்கள் பெற சென்னை கொளத்தூரில் உள்ள ஆளில்லா பி வி கே விற்பனை இடத்துக்கு வருகை தரலாம்.

பி வி கே ( BVK) பிரியாணி 2020 இல் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு முஸ்லீம் வீட்டு கல்யாண சுவையில் உயர்தரமான பிரியாணியை வழங்கி வருகிறது . 

பி வி கே பிரியாணியின் சிறப்பம்சம், அவர்கள் உபயோகப்படுத்தும் இறைச்சி பண்ணையிலிருந்து நேரடியாக சமையல் கூடத்திற்கு சில மணி நேரங்களில் வந்து சேர்கிறது. மேலும் பிரியாணிக்கு தேவைப்படும் மசாலாக்களை தினமும் தேவைக்கு ஏற்ப புதிதாக அரைத்து உபயோகிக்கிறார்கள். 

தயார் செய்யப்பட்ட பிரியாணியை மறுசுழற்சி செய்யக்கூடிய டின் டப்பாக்களில் விற்பனை செய்கின்றனர். இவர்களின் பாய் வீட்டு கல்யாணம் செயலி ” The BVK Biryani” இல் ஆர்டர் செய்தால் ( பி வி கே BVK செயலி google ஆப் ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கும்) சென்னையில் உள்ள வாடிக்கையாளர்கள் 60 நிமிடங்களில் டெலிவரியைப் பெற முடியும் என்கின்றனர். 

வரக்கூடிய காலங்களில் ஆன்லைன் மற்றும் செயலி மூலம் ஆர்டர் செய்தவுடன் 30 நிமிடங்களில் வாடிக்கையாளர்கள் பி வி கே பிரியாணியை பெறக்கூடிய வகையில் திட்டங்களை வைத்துள்ளனர். ஸ்விகி மற்றும் ஜொமாட்டோவிலும் ஆர்டர் செய்து பெறலாம். 

பிரியாணி விரும்பிகளை தன் வசப்படுத்த கூடிய வகையில் இது போன்ற பிரத்யேகமான ஆட்கள் இல்லாத விற்பனைக்கூடங்களை சென்னையில் மேலும் 12 இடங்களிலும் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இதை விரிவுபடுத்தப் போகிறோம் என கூறுகின்றார் பி.வி.கே BVK வின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு எஸ். ஃபக்கிம்(S.Faheem) அவர்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *