
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அராலி சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் குறிகாட்டுவானிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.