Uncategorized

மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் பற்றிய தீ

மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் பற்றிய தீ
மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் பற்றிய தீ


கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

இயந்திர பகுதியில் தீ

 மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் பற்றிய தீ


கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரம் இன்று சனிக்கிழமை காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டது.


புறப்பட்டு இருபது நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் 188ஆவது மைல் கல் அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ளது.

பாரிய விபத்தில் இருந்து பாதுகாப்பு

மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் பற்றிய தீ | Fuel Train Fire Accident Batti Colombo


புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் இதனை அவதானித்ததையடுத்து புகையிரத்தை நிறுத்தியதுடன் பாரிய விபத்தில் இருந்து புகையிரத்தை பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.



இதனை அடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து மற்றுமொரு புகையிர இயந்திரத்தை கொண்டுவந்து தீப்பிடித்த புகைதிரத்துடன் எரிபொருள் அடங்கிய கொள்கலன்களையும் மட்டக்களப்புக்கு மதியம் 12.00 மணியளவில் கொண்டு சென்றனர்.

Gallery
Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *