Uncategorized

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது தாக்குதல்

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது தாக்குதல்
பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது தாக்குதல்


கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் தனது மாமியாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரதேசவாசிகளின் முறைப்பாடுகளுக்கு அமைய நேற்றையதினம்(17.03.2023) காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



கெலிஓயாவைச் சேர்ந்த குறித்த ஆசிரியை தனது 80 வயது மாமியாரை தாக்கி வருவதாக பிரதேசவாசிகள் காவல்துறையின் 119 அவசர பிரிவுக்கு தகவல் வழங்கினர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேக நபரை தவுலகல காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாமியார்

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது தாக்குதல்

பாதிக்கப்பட்ட மாமியாரை தாக்கியதில் ஆசிரியை மட்டுமின்றி, அவரது தாயார் மற்றும் அவரது மகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.



புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மாமியார் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆசிரியைக்கு கடும் எச்சரிக்கை

பிரபல பாடசாலையின் ஆசிரியை மாமியார் மீது தாக்குதல் | Teacher Assaulting Her Mother In Law



ஆசிரியையை கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து தாக்கினால் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவித்தனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *